சி-விஜில் மொபைல் செயலி குறித்து விழிப்புணர்வு …
தருமபுரி மாவட்டம் மாட்லாம்பட்டி சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் சி-விஜில் மொபைல் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான திருமதி எஸ்.பி.கார்த்திகா அவர்கள் தலைமையில் சி- விஜில் வடிவில் ஒருசேர நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி கவிதா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி நாகலட்சுமி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் திரு.சீனிவாச சேகர், கல்லூரி முதல்வர் திருமதி புஷ்பலதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பணிவண்ணன், திரு.ராமஜெயம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.மு.பாரதிதாசன், மகளிர் திட்ட அலுவலர் திரு.காமராஜ், திரு.கணேசன், திரு.அனபுசாமி, திரு.சிவகுமார் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.