தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வியாசர்பாடி மற்றும் பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
வருகிற 06.4.2021 அன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை யொட்டி,
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள்
உத்தரவின்பேரில், சென்னை பெருநகரில் உள்ள வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும்
மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு
வருகிறது.
பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்க உரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்திட,
சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும், தேர்தல் பாதுகாப்பு
பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து
பாதுகாப்பு பணிக்காக வந்துள்ள மத்திய துணை இராணுவப் படையினர் ஒருங்கிணைந்து,
முக்கிய மக்கள் கூடும், வசிப்பிட பகுதிகளில் காவல் கொடி அணிவகுப்பு (Police Flag March)
நடத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, நேற்று (25.03.2021) மாலை, வண்ணாரப்பேட்டை துணை
ஆணையாளர் (பொறுப்பு) திரு.கே.சாமிநாதன்,இ.கா.ப., தலைமையில், H-8 திருவொற்றியூர்
எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், கீழ்பாக்கம் சரக உதவி ஆணையாளர் திரு.ராஜா
தலைமையில், G-7 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், காவல் அதிகாரிகள்,
ஆளிநர்கள் மற்றும் மத்திய துணை இராணுவப்படையினருடன் காவல் கொடி அணி வகுப்பு
நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து இன்று (26.3.2021) காலை எம்.கே.பி.நகர் சரக உதவி
ஆணையாளர் திரு.ஜி.அரிகுமார் தலைமையில், P-3 வியாசர்பாடி காவல் ஆய்வாளர்கள்,
உதவி ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் மத்திய துணை இராணுவப்படையினருடன்
P-3 வியாசர்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் கொடி அணிவகுப்பு
நடைபெற்றது. கொடி அணிவகுப்பு, வியாசர்பாடி கல்யாணபுரம் தொடங்கி பள்ள தெரு,
கென்னடி நகர், மெகசின்புரம், மல்லிப்பூ காலனி, நேரு நகர், உதயசூரியன் நகர்,
எம்.கே.பி.நகர் மெயின் ரோடு வழியாக சென்று முல்லைநகரில் முடிவுற்றது.
மேலும், இன்று (26.3.2021) காலை, S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்கள்
திரு.சேட்டு (ச &ஒ), திரு.வீரகுமார் (குற்றப்பிரிவு) தலைமையில், உதவி ஆய்வாளர்கள், காவல்
ஆளிநர்கள் மற்றும் மத்திய துணை இராணுவப்படையினருடன், S-16 பெரும்பாக்கம்
காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 8 அடுக்கு புது பிளாக், 8 அடுக்கு பழைய பிளாக் மற்றும்
சுற்றுப்புற பகுதிகளில் காவல் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.