சமூகத்தில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டு….

Loading

கன்னியாகுமரி மாவட்டம் :- உலகமகளிர் தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டதை முன்னிட்டு சமூகத்தில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கபட்டு வருவது வழக்கம்.
அந்த வகையில் குமரி மாவட்டம் சுசீந்திரம் காவல் நிலையத்தில் பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களை கௌரவிக்கும் விதமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மதியம் காவல் நிலைய பெண் காவலர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு மதிய விருந்தாக பிரியாணி வழங்கப்பட்டது. இதில் காவல் நிலைய ஆய்வாளர் காளியப்பன், உதவி ஆய்வாளர் ஆறுமுகம் மற்றும் சக காவலர்களும் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply