கன்னியாகுமரி மாவட்டத்தில் நவீன சுழலும் கேமரா பொருத்தப்பட்ட காவல் வாகனத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்……

Loading

பிப் 20, கன்னியாகுமரி :- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வெ. பத்ரி நாராயணன் IPS அவர்கள் நேற்று மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெறும் வாராந்திர கவாத்தில் கலந்து கொண்டார். மேலும் மாவட்டத்தில் நடைபெறும் அரசியல் தலைவர்கள் கூட்டம், ஆர்ப்பாட்டம், முக்கிய விழாக்களில் பாதுகாப்பு பணிக்காகவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும். அசம்பாவிதங்கள் ஏதுவும் ஏற்படாமல் தடுக்கவும், நவீன கண்காணிப்பு கேமரா பொருத்திய காவல் வாகனத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த வாகனத்தில் எல்லா திசைகளிலும் சுழன்று படம் பிடிக்கும் நவீன கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தும் போது அங்கு நடைபெறும் நிகழ்வுகளை படம் பிடித்து பாதுகாப்பு பணியில் சிறப்பாக செயல்பட முடியும்.
அதனுடன் ஆயுதப்படை வளாகத்தில் ஆயுதங்களை வைப்பதற்கு புதிய ஆயுத வைப்பறையையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஈஸ்வரன் அவர்களும், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சாம் வேதமணிக்கம் அவர்களும் கலந்து கொண்டார்கள்…

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *