இயற்கை வேளாண்மை குறித்த பட்டறிவு பயணம்:
இயற்கை வேளாண்மை குறித்த பட்டறிவு பயணம்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாரம் தோட்டகலை துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் விரிவாக்க சீரமைப்பு திட்டம் 2020-21. மேலாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் (அட்மா) மூலம் 10-02-2021 அன்று உள் மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை குறித்த கண்டுணர்வு சுற்றுலாவானது கோத்தகிரி வட்டம் செம்மனாறை கிராமத்தில் உள்ள Wild eden இயற்கை வேளாண்மை பண்ணையில் நடைபெற்றது.மேற் கண்ட நிகழ்ச்சியானது திருமதி.S.ஷிபிலாமேரி தோட்டகலை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம் )உதகை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திரு.ராக்கேஷ் வட்டார தொழில் நுட்ப மேலாளர் அவர்கள் வருகை புரிந்து விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் வரவேற்று அட்மா திட்டத்தினை குறித்து விளக்கினார்கள். மேற்கண்ட கண்டுணர்வு சுற்றுலாவில் இயற்கை வேளாண்மை பண்ணை உரிமையாளரான திரு.கணேசன் அவர்கள் இயற்கை வேளாண்மை குறித்து விளக்கினார். தற்போது உணவே நஞ்சாக மாறியுள்ள சூழ்நிலையில் இயற்கையினை பாதுகாத்து வேளாண்மை செய்வதன் அவசியத்தினை குறித்தும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை தங்கள் தோட்டத்தில் கிடைக்கும் பொருட்களை கொண்டும் தயாரிக்கும் முறைகளை விளக்கினார். பஞ்சகாவ்யம், தசகாவ்யம், ஜீவாமிர்தம்,அமிர்த்த கரைசல்,மீன் அமிலம் மற்றும் வேளாண் கழிவுகளை விவசாயிகள் எரித்து வீணாக்காமல் அதனை கம்போஸ்டாக மாற்றி இயற்கை உரமாக பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கதோடு விளக்கினார்.
இயற்கை விவசாயி திருமதி.சுதா அவர்கள் பல பயிர் சாகுபடி செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருந்து பல வகையான காய்கறி பயிர்களை ஒரே சாகுபடி செலவில் இயற்கை முறையில் விளைவிப்பது குறித்து விளக்கினார். இதனால் சாகுபடி செய்யும் நிலம் வளம் பெறுவதுடன் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் தொடர்ந்து ஒவ்வொரு பயிரின் அறுவடையில் இருந்து வருமானம் கிடைக்கும் என்பதினை விளக்கினார்.
விவசாயிகள் தொடர்ந்து கேரட் உருளைகிழங்கு என்று சாகுபடி செய்வதைவீட இத்துடன் சேர்த்து கீரைவகைகள் டபுள்பீன்ஸ் நூல்கோல் முள்ளங்கி பீட்ரூட் மூலிகை பயிர்களையும் சேர்த்து சாகுபடி செய்ய கோரினார்.
மேற்கண்ட பயிற்சியினை விரிவாக்க சீரமைப்பு திட்டத்தினை சார்ந்த உதவி தொழில் நுட்ப மேலாளர்களான திரு.ஜான்போஸ்கோ மற்றும் திரு.T.R.அபினேஷ் அவர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து நன்றியுரை வழங்கினார்கள். மேற்கண்ட சுற்றுலாவில் குன்னூர் வட்டாரத்தினை சார்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள்