திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் :
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான இரா.தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார்.
அப்போது புதி ய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என்றும்., ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும் என்றும், இடை நிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும் என்றும், ஆசிரியர்கள் இட மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும் அலுவலக உதவியாளர்கள், இரவு நேர காவலர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
அப்பொழுது தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்றும் அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் கோட்டையை நோக்கி முதல்வரை சந்திக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் எனவும் எச்சரித்தார்.