கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் ஆட்சியர் ஆய்வு…
ஈரோடு பிப்ரவரி 9
கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சி கதிரவன் திங்களூர் பகுதியில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
கொடிவேரி கூட்டு குடிநீர் ரூ 227 கோடி மதிப்பீட்டில் கொடிவேரி அணை நீர் ஆதாரமாகக் கொண்டு 28 கிராம ஊராட்சிகள், திங்களூர் பெருந்துறை நல்லாம்பட்டி காஞ்சிக்கோயில் பேரூராட்சிகள் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 4 ஊராட்சிகள் ,திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சிகள் குடிநீர் பிரச்சனைகள் தீரும் என்பதால் வருகிற கோடை காலத்திற்கு முன்பாக பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க துரித நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது திங்களூர் பகுதியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது திட்டப்பணிகள் குறித்து வடிகால் வாரிய அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சியர் துரிதப்படுத்தி பணிகள் முடிக்கக் கோரி உத்தரவு பிறப்பித்தார் ஆய்வில் துறைசார்ந்த அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்