கார்வேர் டெக்னிக்கல் ஃபைபர்ஸ் நிறுவனம், இந்தியாவில் மீன்பிடி சந்தையை வழி நடத்துகிறது…

Loading

கார்வேர் டெக்னிக்கல் ஃபைபர்ஸ் நிறுவனம், இந்தியாவில் மீன்பிடி சந்தையை வழி நடத்துகிறது
புதுச்சேரி, ஜனவரி, 2021: இந்தியப் பொருளாதாரத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறிப்பிடத்தக்க பங்கை அதாவது சுமார் 1 சதவிகித பங்களிப்பை இந்திய மீன்வளத் துறை கொண்டுள்ளது. கார்வேர் டெக்னிக்கல் ஃபைபர்ஸ் லிமிடெட் (ஜி.டி.எஃப்.எல் – Garware Technical Fibres Ltd -GTFL) இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப ஜவுளிகள் உற்பத்தியாளர்களில் (technical textiles manufacturer) ஒன்றாகும். இது இந்திய மீனவ சமூகத்திற்கு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி சந்தையில் (mechanized fishing market) தீர்வு வழங்கும் நிறுவனங்களில் முக்கிய ஆதிக்கம் செலுத்துகிறது.
பல ஆண்டுகளாக இந்திய மீனவர்களுக்கு, வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புதுமைகளை உருவாக்குவதன் மூலம் எங்கள் நிறுவனம் வளர்ந்துள்ளது. கார்வேர் மீன்பிடி வலைகளின் வெற்றியை விரிவாகக் கூறி, சுஜால் ரெஹ்மான் மேலும் கூறினார், “ பொதுவாக, ஓர் இந்திய மீனவர் மீன்பிடிக் கலன் பயணிக்க தனது செலவினங்களில் கிட்டத்தட்ட 70% தொகையை டீசல் எரி பொருளுக்காக செலவிடுகிறார். எங்கள் மீன்பிடி வலைகள், மீன் பிடிக் கலன்களின் எரிபொருள் செலவைக் குறைக்கும். இதன் மூலம் மீனவர்கள் ஒரு பயணத்திற்கு 50 முதல் 100 லிட்டர் டீசல் வரை சேமிக்க முடியும், மொத்த சேமிப்பு மூலம் மீன்பிடிக் கலனுக்கு ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை மிச்சப்படுத்த முடியும்.
ஜி.டி.எஃப்.எல், மீன்பிடி வலைகளை புதுமையாக வடிவமைக்கிறது. இது மீன்களை இழக்காமல் அல்லது சரியான வகை மீன்களை பிடிப்பதற்கு உறுதி செய்யும் அதேநேரத்தில், மீன்பிடிக் கலனின் வேகத்தை குறைக்காமல் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இதை அடைய, சரியான மூலப் பொருள், வலையின் உள்ளமைவு மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றின் கலவையானது மிக முக்கியமானதாகும். மேலும், இந்தியா முழுவதும் உள்ள மீனவர்களால் கார்வேர் மீன்பிடி வலைகள் விரும்பப்படுவதற்கான முக்கியக் காரணம் இதுதான் ” என்றார்.

Attachments area

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *