அங்கக வேளாண்மை விழிப்புணர்வு முகாம்:

Loading

அங்கக வேளாண்மை விழிப்புணர்வு முகாம்:
தோட்டகலை மற்றும் மலைபயிர்கள் துறை குன்னூர் வட்டாரத்தில் அதிகரட்டி பஞ்சாயாதிற்கு உட்பட்ட காட்டேரி கிராமத்தில் அங்கக வேளாண்மை விழிப்புணர்வு முகாமானது விவசாயிகளிடையே இயற்கை வேளாண்மையை ஊக்கபடுத்தும் விதமாக நடத்தபட்டது இதில் குன்னூர் வட்டார தோட்டகலை உதவி இயக்குநர் திருமதி.பா.பெபிதா அவர்கள் இயற்கை விவசாயத்தின் முக்கியதுவத்தை விளக்கியதோடு உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா டி.விரிடி பஞ்சகாவ்யா தசகாவ்யா தயாரிப்பு முறையினை செயல் விளக்கம் மூலம் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் Organic Nilgiris செயலின் முக்கியதுவம் பற்றியும் எடுத்துறைக்கபட்டது.மேலும் இந்த முகாமில் கலந்து கொண்ட விவசாயிகள் தானாக முன் வந்து இயற்கை விவசாயம் செய்வதற்கு மாதிரி திடலை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. விவசாயதிற்கு அடிப்படையாக செயல்படும் மண்ணின் முக்கியதுவம் மற்றும் மண் மாதிரி எடுக்கும் முறை பற்றியும் மண் பரிசோதனை ஆய்வு கூடத்தின் வேளாண்மை அலுவலர் திருமதி.நிர்மலா அவர்கள் எடுத்துரைத்தார். மேலும் தோட்டகலை துறையின் திட்டங்கள் மற்றும் உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் குறித்து தோட்டகலை அலுவலர் செல்வி.வின்யா அவர்கள் எடுத்துரைத்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *