தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை நிறுவ தமிழக முதல்வருக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை…

Loading

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை நிறுவ தமிழக முதல்வருக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை

சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை நிறுவ முதல்வருக்கு அம்பேத்கர் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது, இது தொரடப்பாக அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

இந்திய விடுதலைக்குப் பிறகு, மக்களாட்சி மட்டுமே நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு வித்திட இயலும் எனக் கருதி, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1950 ஜனவரி 26 முதல் குடியரசு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இன்று 71 வது குடியரசு தினத்தை கொண்டாடும் வேளையில் அண்ணல் அம்பேத்காருக்கு சென்னையில் உள்ள சட்ட பல்கலை கழகத்தில் அவரது சிலை இல்லாதது சட்ட மேதை , அரசியல் சாசன ஆசான் அவருக்கு நாம் செலுத்தும் உரிய மரியாதையை ஆகாது. தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலை கழகங்கள் பல்வேறு தலைவரின் பெயர்களை கொண்டுள்ளன அங்கேயெல்லாம் அவர்களுடைய சிலைகள் உள்ளன, எடுத்துக்காட்டாக அண்ணா பல்கலை கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் , காமராஜர் பல்கலைகழகம். உலக தலைவர்கள் பலரும் புகழ்ந்த உன்னதமான அரசியல் சாசனத்தை இந்திய நாட்டிற்க்கு இயற்றி தந்த சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் முழு உருவ சிலையை சென்னை தரமணியில் உள்ள சட்ட கல்லூரியில் நிறுவிட தமிழக முதல்வரை அம்பேத்கர் மக்கள் இயக்கத்தில் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *