32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு, வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத விழாவில், சீட்பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் ஒட்டினார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், அவர்கள்,
மாநிலங்களவை உறுப்பினர் திரு.அ.விஜயகுமார் அவர்கள் முன்னிலையில், 32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு,
வடசேரி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு மாத விழாவில்,
சீட்பெல்ட் மற்றும் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை பேருந்துகளில் ஒட்டினார்கள்.
உடன் வட்டார போக்குவரத்து அலுவலர் (நாகர்கோவில்) திரு.கே.சந்திரசேகர், மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி.பத்மபிரியா,
போக்குவரத்து ஆய்வாளர் (நாகர்கோவில்) திரு.அருண் உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.