சேலம் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 60ஆம் ஆண்டு விளையாட்டு விழா
சேலம் ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 60ஆம் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு தலைமை விருந்தினராக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் பங்கேற்றார்.சேலம் அர்த்தனாரி தறி மையத்தின் இணை நிர்வாக இயக்குனர் ஆதித்யா கௌரவ விருந்தினராகவும் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக ஹோலி கிராஸ் அருட் சகோதரர்கள் சபையின் தலைவர் அருட் சகோதரர் சந்தோஷ் பங்கேற்றார்.
பள்ளி முதல்வர் அருட்சகோதரர் சேசுராஜ் தலைமை வகித்தார்.மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் எட்வர்ட் ஜோசப்,மேல்நிலைப் பள்ளியின் நிர்வாகி அருட் சகோதரர் ஏசுதாசன், தொடக்கப் பள்ளியின் துணை முதல்வர் சங்கீதா, ஹோலி கிராஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் முதல்வர் அருட் சகோதரர் குழந்தைசாமி,மற்றும் அருட் சகோதரர்கள் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கு பல்வேறு பள்ளிகளில் தாளாளர்கள், முதல்வர்கள்,தலைமை ஆசிரியர்கள்,அருட்தந்தையர்கள், அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள், மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவில் காந்தி மைதானத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர் மன்ற தலைவர் ஆசிஷ் சௌவ்லா அவர்கள் ஒலிம்பிக் டார்ச்சை ஏற்றி வைத்தார்.
அதன் பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவர் மன்ற துணைத் தலைவர் திருநாவுக்கரசு அவர்களால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.அதை ஏந்தி வந்த மாணவர்கள் பள்ளியில் விளையாட்டுச் சுடரை ஏற்றி வைத்தனர்.பள்ளியில் மாணவர் தலைவர் ஆதித்யா கிருஷ்ணா வரவேற்புரை ஆற்றினார்.மேலும் மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
தொடர்வட்டம்,ஜிம்னாஸ்டிக், நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற்றன.தொடர்ந்து சிறப்பு விருந்தினர் சிறப்புரையாற்றி விளையாட்டில் கலந்து கொண்ட மாணவ,மாணவிகளுக்கு, பரிசுகளும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கினார்கள். விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அருட் சகோதரர் சேசுராஜ் தலைமையில் விளையாட்டு துறை ஆசிரியர்கள், விழா குழுவினர் மற்றும் அனைத்து ஆசிரியைகள் ஏற்பாடு செய்திருந்தனர்.