கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏதுவாக இடங்கள் அமைக்கப்படவில்லை.

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த ஏதுவாக இடங்கள் அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனையடுத்து வேப்பமூடு அருகில் ஏற்கனவே மருத்துவமனை கட்டிடம் அப்புறப்படுத்தப்பட்ட காலியான இருந்த இடத்தை சரி செய்து அங்கு இரு சக்கர வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த மாநகராட்சி ஆணையர் திருமதி . ஆஷா அஜித் அவர்கள் உத்தரவிட்டார். அதன்படி பொது மக்கள் பங்களிப்பு திட்டத்தின் கீழ் தற்பொழுது அங்கு ஒரு பகுதியில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு 80 முதல் 100 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த முடியும். மற்றொரு பகுதியில் சாலையோர பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாலையோர பூங்காவில் பொதுமக்கள் அமர்ந்திருக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு நிழல் தரும் மரக்கன்றுகளும் வைக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *