காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் 2 ம் தேதி கிராமசபை கூட்டம் :
திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் 2 ம் தேதி கிராமசபை கூட்டம் :
திருவள்ளூர் அக் 01 : திருவள்ளூர் மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 02.10.2023 அன்று கிராமசபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராமஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், ஊரகப்பகுதிகளில் மழைநீர்சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்குகாய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதிதிட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சிதிட்டம், தூய்மைபாரத இயக்கம் (ஊரகம்), பிரதமமந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், 2023-24 ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல்திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தல் வேண்டும்.
இவ்வாறு நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராமசபை விவாதங்களில் பங்கேற்று, பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாமல் பங்கேற்று கலந்துக்கொள்ளும் பொழுது உரிய கொரோனா தடுப்பு அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.