மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யும் பணி துவங்கியது நள்ளிரவு முதலே திரண்ட வீரர்கள்.
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதேபோல் அவனியாபுரத்தில் 14ஆம் தேதியும், பாலமேட்டில் 15ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மூன்று இடங்களிலும் வாடிவாசல் அமைக்கும் பணி வேகமாக நடக்கிறது.
மாடுபிடி வீரர்கள் தேர்வு.இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக போட்டி நடத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 50 சதவீத பார்வையாளர்கள் மற்றும் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே பங்கேற்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களை தேர்வு செய்வதற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று துவங்கியது. இதையொட்டி முதல் நாள் நள்ளிரவு முதலே மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளில் குவிந்தனர். அங்குள்ள அரசு ஒன்றிய துவக்கப்பள்ளியில் வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. வீரர்கள் நான்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வுடன், ஆதார் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வு முறை.வீரர்கள் 18 வயதுக்கு வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், 50 கிலோ எடை மேல் இருக்க வேண்டும், உயரம் 5 அடிக்கு மேல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடலில் காயங்கள், தழும்புகள், அறுவை சிகிச்சை செய்த தழும்புகள் ஏதும் இருக்கக் கூடாது என அரசு எச்சரித்துள்ளது. தினமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களாக வீரர்கள் இருத்தல் கூடாது. சர்க்கரை நோய், இதய நோய் போன்றவைகள் இருப்பவர்கள் நிராகரிக்கப்படுவர் போன்ற பல கட்டுப்பாடுகளுடன் வீரர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
மருத்துவக் குழு உடற்தகுதி பரிசோதனை முகாமில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜுன் குமார் தலைமையில், வட்டார மருத்துவர்கள் வளர்மதி மேற்பார்வையில், மருத்துவர்கள் மோகன் குமார், பூமேஷ் குமார் ஆகியோர் முன்னிலையில், சுகாதார ஆய்வாளர்கள் ராமன், ராஜசேகர், முருகன் உட்பட மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யும் பணியில் 80 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வீரர்களை பரிசோதித்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அடையாள அட்டை வழங்கினர். அடையாள அடைடை பெற்ற வீரர்களுக்கு வருகின்ற 11ம் தேதி முதல் 13ஆம் தேதி வரையும், காலை உரிமையாளர் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை முடிவு வந்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியும்.
இதனை இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 300 வீரர்களுக்கு மிகாமலும், 650 காளைகளும் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு தனித்தனியாக மாடுபிடி வீரர்கள் தேர்வு நடத்தப்படும். ஆனால் இந்த ஆண்டு நேற்று ஒரே நாளில் மூன்று இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு மாடு பிடி வீரர்கள் தேர்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.