பொங்கல் இலவச வேட்டி சேலை பொங்கல் பரிசு விநியோகம்…
தென்காசி
தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி சேலை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.2500 மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் வழங்கப்படுகிறது. இதன்படி தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பிடாகைப் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணாநகர் நியாயவிலைக்கடை(EC0071P1) கடையில் பொங்கல் பரிசு மற்றும் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியை சவுதி அரேபியா அம்மா பேரவை மூத்த நிர்வாகி கட்டகுட்டி (எ) சேக் உசேன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அண்ணாநகர் 9வது வார்டு அதிமுக செயலாளர் கோபாலகிருஷ்ணன், துணைச்செயலாளர் திருமலைக்குமார், மகேந்திரன், பொன்னுச்சாமி, நகர அதிமுக ஊடகப்பிரிவு இணைச்செயலாளர் கமலஹாசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.