வேலூர் மாவட்ட காவல் நிலையங்கள் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
![]()
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள மனுக்களை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இன்று வேலூர் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாத்துமதுரை, துத்திப்பட்டு, இடையன்சாத்து, மூஞ்சூர்பட்டு ஆகிய இடங்களுக்கு வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.காமினி மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் நேரில் சென்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் நிலுவையிலுள்ள மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்க சிறப்பு விசாரணை(Mass Grievance Redressal Mela) நடைபெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தினசரி வரும் புகார் மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.
