செய்தித்துறை அமைச்சரிடம்அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கம் மனு

Loading

4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் சார்பில் செய்தித்துறை அமைச்சரிடம் மனு

சிவகங்கை, நவ. – 27

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடைபெற்ற கம்பன் கழக திருவிழாவில், ராஜ்மோகன், பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம், சிவகங்கை மாவட்ட கிளை சார்பில், செய்தியாளர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, மனு வழங்கப்பெற்றது.

சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முத்தமிழ் அரசன் ஆலோசனைப்படி, மாவட்டத் தலைவர் சுப்பிரமணியன் வழிகாட்டலில், சங்கத்தின் பொருளாளர் ஏகநாதன், துணைச் செயலாளர் முத்து ஆகியோருடன் மாவட்டச் செயலாளர் ரவி, ராஜ்மோகன், செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, மனு வழங்கினார்.

அந்த மனுவில் தெரிவித்துள்ள கோரிக்கைகள் குறித்து, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரவி தெரிவிக்கையில்,

“தமிழகம் முழுவதும் சலுகைவிலை வீட்டுமனை கிடைக்கப்பெறாத செய்தியாளர்களுக்கு, உடனடியாக சலுகைவிலை வீட்டுமனை வழங்கிடவும்,
            
அதேபோல், தற்பொழுது செய்தியாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலவரம்பு, 20-ஆண்டுகள் என்பதனை, 15-ஆண்டுகளாக குறைத்திடவேண்டி, ஆணை பிறப்பித்திடவும் மனு கொடுக்கப்பெற்றது”.

மேலும், “செய்தியாளர்களுக்கு, வழங்கிவரும், பேருந்து பயணஅட்டை, (குளிர்சாதனப்பேருந்து நீங்கலாக) அனைத்து அரசுப்பேருந்துகளிலும், தமிழ்நாடு முழுவதும் செல்லத்தக்கவகையில் ஆணை பிறப்பித்திடவும்,

நலவாரியப் பலன்கள் அனைத்தும், உரிய செய்தியாளர்கள் அனைவருக்கும், மிக எளிதில் உடனடியாக கிடைக்கும்வண்ணம் ஆணை வழங்கிடவேண்டியும், உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், ராஜ்மோகன், செய்தித்துறை அமைச்சரிடம் மனு வழங்கப்பெற்றது” என்றும் ரவி தெரிவித்தார்.

செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன், “இதுகுறித்து, தமிழ்நாடு முதலமைச்சரின் மேலான கவனத்திற்கு கொண்டுசென்று, முதலமைச்சர் அவர்கள் இசைவுடன், அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றிட ஆவன செய்வோம்”, எனக் கூறினார்.

0Shares