ஒருங்கிணைந்த சிகிச்சை சிறப்பு புதிய மையம்
![]()
ஒருங்கிணைந்த சிகிச்சை சிறப்பு புதிய மையம்
நாள் பட்ட இரத்த உறைவால், ஏற்படும் நுரையீரல் உயர் இரத்த அழுத்த நோய்க்கான விரிவான ஒருங்கிணைந்த சிகிச்சை திட்டத்திற்கான சிறப்பு மையத்தை கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுச்சாமி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் இதயவியல் துறைத் தலைவர் டாக்டர் சாம்பசிவம், இதய நுரையீரல் அறுவை சிகிச்சை துறைத்தலைவர் டாக்டர் வெங்கட தேவநாதன், இதய செயலிழப்பு சிகிச்சை பிரிவு தலைமை ஆலோசகர் டாக்டர் சண்முக சுந்தரம் மற்றும் இதய நுரையீரல் அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் ராகேஷ் சீதாராமன் உள்ளிட்ட பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ரகுபதி வேலுச்சாமி கூறியதாவது..
நுரையீரல் தமனியில் இரத்த உறைவு என்பது, இதயத்தின் வலது பக்கத்தில் இருந்து நுரையீரலுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில், இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஒட்டம் தடை படுவதை குறிக்கின்றது
. நாள்பட்ட இரத்த உறைவு என்பது நுரையீரல் தமனியில் ஏற்பட்ட இரத்த உறைவு, தழும்பு போன்ற திசுக்களாக மாறி கரையாமல், நுரையீரல் தமனிகளில் நிரந்தர குறுகலையோ, அல்லது அடைப்பையோ ஏற்படுத்துகிறது. இந்த இரத்த அடைப்பு நுரையீரலுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடுத்து, நுரையீரல் தமனிகளில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் இரத்தத்தை நுரையீரலுக்கு பம்ப் செய்ய இதயத்தின் வலது பக்கம் அதிகமாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது என்றாார்

