கோவையில் ஜே.சி.எஸ். ஜுவல் கிரியேஷன்ஸ் திறப்பு

Loading

கோவையில் ஜே.சி.எஸ். ஜுவல் கிரியேஷன்ஸ் திறப்பு
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நகை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஜே.சி.எஸ். ஜுவல் கிரியேஷன்ஸ், தங்களது இரண்டாவது கிளையை, கோவை ஆர்.எஸ். புரத்தில் தனது புதிய நகை விற்பனையகமாக தொடங்கியது. 1979 ஆம் ஆண்டு முதல் நகை தயாரிப்புத் துறையில், 47 ஆண்டுகால அனுபவமும், பாரம்பரியமும் கொண்ட இந்நிறுவனம், தனது பிரத்யேக நகை சேகரிப்புகள் மற்றும் தனித்துவமான வாடிக்கையாளர் சேவையை கோவை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் அரவிந்த் கட்ரேலா தலைமையில் செயல்பட்டு வரும் ஜே.சி.எஸ். ஜுவல் கிரியேஷன்ஸ், 2013 ஆம் ஆண்டு நேரடி சில்லறை விற்பனைத் துறையில் தனது பயணத்தைத் தொடங்கியது. பல தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் நகை தயாரிப்பு அனுபவம் மற்றும் கைவினைத் திறனை அடிப்படையாகக் கொண்டு, சென்னையில் தனது வலுவான இருப்பை உருவாக்கிய இந்நிறுவனம், தற்போது கோவையிலும் தனது விற்பனைச் செயல்பாடுகளை விரிவுபடுத்துகிறது.

புதிய விற்பனையகத்தில் தங்கம், வைரம், பிளாட்டினம், ஜடாவ் மற்றும் வெள்ளி நகைகளின் விரிவான தொகுப்புகள் இடம்பெறுகின்றன.

0Shares