கோவை விமானத்தில் பறந்த பள்ளி மாணவர்கள்

Loading

தன்னார்வ தொண்டு அமைப்புகளால் சென்னையில் இருந்து கோவைக்கு முதன்முறையாக விமானத்தில் பறந்த ஆதரவற்ற குழந்தைகள் விமானத்தில் பறந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பேட்டி..
சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளின் கனவுகளுக்கு சிறகுகள் அளிக்கும் நோக்கில், ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகள் இணைந்து முன்னெடுத்து வரும் பிளைட் ஆப் பேண்டஸி திட்டத்தின் 6வது பதிப்பு கோவையில் நடைபெற்றது.
கோயம்புத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20, கோயம்புத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11 மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த முன்னெடுப்பை ஏற்பாடு செய்யபட்டது.
இதன் ஒரு பகுதியாக, குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நவம்பர் 14-ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சென்னையில் உள்ள ஸ்ரீ சர்வோதயா விடுதியில் தங்கியுள்ள 15 மாணவிகள் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அழைத்து வரப்பட்டனர். 13 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கு புதிய அனுபவங்களையும், மகிழ்ச்சியான நினைவுகளையும் வழங்கும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரவுண்ட் டேபிள் இந்தியா, ஏரியா 7 மற்றும் லேடீஸ் சர்க்கிள் இந்தியா அமைப்புகளின் ஆதரவுடன், கோயம்புத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20 மற்றும் கோயம்புத்தூர் நார்த் லேடீஸ் சர்க்கிள் 11 இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்தன. மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 அமைப்பும் இம்முயற்சியில் இணைந்தது.
கோயம்புத்தூருக்கு வந்த மாணவிகளுக்கு பிரபல அன்னபூர்ணா உணவகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஜிடி அறிவியல் அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவிகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு தகவல்களை நேரடியாக அறிந்துகொண்டனர். பிற்பகலில் பெண்கள் மேம்பாடு குறித்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி மெர்லிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.
இதில் இதில் கோவை மேற்கு மண்டல ஐஜி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதி மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனைப் பெண்கள் பங்கேற்று மாணவிகளுடன் கலந்துரையாடினர். தன்னம்பிக்கை, சுயமரியாதை, தலைமைப் பண்பு மற்றும் பெண்கள் முன்னேற்றம் குறித்து மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் கருத்துகள் பகிரப்பட்டன.
தொடர்ந்து, மாணவிகள் கோயம்புத்தூரில் ஒரு நாள் முழுவதும் மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெற்ற பின்னர், இரவு 8 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்குத் திரும்பினர். இந்த நிகழ்ச்சியில் பிளைட் ஆப் பேண்டஸி ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திருமலைசாமி, கோயம்புத்தூர் நார்த் ரவுண்ட் டேபிள் 20 தலைவர் விஜய் ஆனந்த் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0Shares