கோவை மாணவர்கள் படுகர் இன நடனமாடி அசத்தல்

Loading

மாணவர்களின் மன இருக்கத்தை போக்கும் விதமாக
அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 
100 வது நாள் கொண்டாட்டம் 100 பேர் படுகர் நடனமாடி அசத்தினார்.. 
கோவை துடியலூர் அருகே உள்ள கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ளது அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் வகுப்புகள் தொடங்கி 100 நாட்கள் ஆவதை ஒட்டி மாணவ மாணவிகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் 100 வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் நூறாவது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி எ லெகசி ஆப் லவ் என்ற தலைப்பில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
தமிழ் தாய் வாழ்த்து மற்றும் கடவுள் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிகளை மாணவ மானவிகளே தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சியில் அன்னை வயலெட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜான்சி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்ச்சியில் 100 நாட்கள் குறித்து குழு பாடல்கள் பாடி மாணவ மாணவிகள் அசத்தினர். தொடர்ந்து ஆறாம் வகுப்பு மாணவி சான்வி இந்தியாவில் ஓடும் 100 நதிகளின் பெயர்களை கூறினார், இரண்டாம் வகுப்பு மாணவி சார்வி பள்ளியில் பயன்படுத்தப்படும் 100 பொருட்களின் பெயர்களை கூறியும் அசத்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பயனியர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கே முருகேசன் பங்கேற்றார். அவரை பள்ளி என் சி சி மாணவர்கள் பேண்ட் வாத்தியத்துடன் சிறப்பான வரவேற்பு வழங்கினர்.
தொடர்ந்து மாணவ மாணவிகளிடம் பேசிய சிறப்பு விருந்தினர் முனைவர் கே முருகேசன் இறைவன் ஒளி வடிவமானவன் அதனையே அனைத்து மதங்களும் பின்பற்றுகின்றன எனவும், திருக்குறள்களை மேற்கோள்காட்டி ஐந்து வகையான மகிழ்ச்சி குறித்து வெளிப்படுத்தினார். தொடர்ந்து கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், குழந்தைகளின் செல் போன் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன், குழந்தைகளுக்கு உங்களது கஷ்டங்களை சொல்லி புரிய வையுங்கள் என பெற்றோர்களிடம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து பள்ளியின் துணைச் செயலர் பி.இ.ஆர் பிரேம் சந்த் தனது உரையில் இந்நிகழ்ச்சியில் 100 நதிகளின் பெயர்களை கூறி அசத்திய மாணவி சான்வி மற்றும் பள்ளியில் பயன்படுத்தும் 100 பொருட்களை கூறிய மாணவி சார்வி ஆகியோரை வெகுவாக பாராட்டினார்.
இதனிடையே படுகர் இனி மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் பள்ளி மாணவ மாணவிகள் 100 பேருடன் இணைந்து ஆசிரியைகள் படுகர் நடனம் ஆடி அசத்தினர். அதைத்தொடந்து 100 வது நாள் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் முனைவர் முருகேசன் குழந்தைகளுக்கான சிறிய ரயிலினை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுடன் பயணம் செய்தார்.
0Shares