பண்ருட்டி கிராம சபை கூட்டத்தில் அதிமுக MLA மோகன் பங்கேற்பு
![]()
பண்ருட்டி அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ மோகன் பங்கேற்பு
பண்ருட்டி. நவ, 4- கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நத்தம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம கூட்டத்தில் பண்ருட்டி அதிமுக எம்எல்ஏ மோகன், கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
அப்பொழுது நத்தம் கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகள் குறித்து எம்எல்ஏ மோகனிடம் மனு வழங்கினார். இதில் கடந்த கால ஆட்சியில் இருந்து தற்போது வரை சாலை வசதி இல்லை குடி தண்ணீர் சரியான முறையில் வழங்குவதில்லை தெருவிளக்குகள் இல்லை மற்றும் 100 நாள் வேலையில் முறைகேடு என ஊராட்சி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைத்து எம்எல்ஏவிடம் மனு வழங்கினர்கள். மனுவை பெற்றுக் கொண்ட அதிமுக எம்எல்ஏ மோகன், மாவட்ட ஆட்சியரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் புகார் குறித்து மனு அளிக்கப்படும் மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறி உடனடியாக தங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இனி வரும் காலங்களில் இந்த ஊராட்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

