பி.ஏ. கார்ஸ் விற்பனை அமைச்சர் விக்னேஷ் திறந்து வைத்தார்

Loading

கோவை உக்கடம் நியூ மார்க்கெட்டில் உள்ள பி.ஏ. கார்ஸ் விற்பனை மையத்தை தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் திறந்து வைத்தார்..
கோவையின் மையப் பகுதியான உக்கடத்தில் அமைந்துள்ள உக்கடம் நியூ மார்க்கெட், வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக மையங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
குறிப்பாக, கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள், அலங்காரப் பொருட்கள், பராமரிப்புப் பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான டூல்ஸ்கள் என வாகனங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரே இடத்தில் வாங்கும் வகையில் இந்த மார்க்கெட் அமைந்துள்ளது.
இதனால், வாகன உரிமையாளர்கள் மட்டுமின்றி மெக்கானிக்குகள், வாகனப் பராமரிப்புப் பணியில் ஈடுபடுவோர் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் உக்கடம் நியூ மார்க்கெட் பயனுள்ள வர்த்தக மையமாகத் திகழும் இந்த நியூ மார்க்கெட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பலர் பொருட்களை வாங்கி செல்கின்றனர்..
இந்நிலையில் தற்போது உக்கடம் நியூ மார்க்கெட் வளாகத்தில் பி.ஏ.கார்ஸ் எனும் கார் அலங்கார பொருட்கள் விற்பனை மையம் துவங்கப்பட்டுள்ளது…
இந்த புதிய விற்பனை மையத்தை தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் திறந்து வைத்தார்…
கார் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான சீட் கவர்கள், ஃப்ளோர் மேட்கள், ஸ்டீயரிங் கவர்கள், பாடி ஸ்டிக்கர்கள், மியூசிக் சிஸ்டம்கள், ஸ்பீக்கர்கள், லைட்டிங் பொருட்கள், மொபைல் ஹோல்டர்கள், சார்ஜர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான அலங்கார மற்றும் பயன்பாட்டுப் பொருட்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப இங்கு குறைந்த விலையில் இருப்பதாக,.பி.ஏ.கார்ஸ் உரிமையாளர் சுஹைல் தெரிவித்தார்…
விழாவில்,இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சுல்தான அமீர், தமுமுக கோவை மாவட்ட தலைவர் பஷீர் அகமது, எஸ்டிபிஐ கோவை மாவட்ட தலைவர் இஷாக் அகமது, முஸ்லிம் லீக் கோவை மாவட்ட தலைவர் அப்துல் கபூர், சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு செயலாளர் பைசல், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட தலைவர் காஜா உசேன், 86 ஆவது வார்டு கவுன்சிலர் அகமது கபீர், உக்கடம் நியூ மார்க்கெட் சங்க கௌரவ தலைவர் உசேன், துணைச் செயலாளர் அசன் P.A.அக்பர் அலி, நியூ மார்க்கெட் ஒருங்கிணைப்பார்கள் ஜக்ரியா, ஜெய்னும்,இலியாஸ்,ராஜா முஹம்மது அஷ்ரப்,ஜமால்,யாசர் அரஃபா,முஜீப் ரஹ்மான்,ரியாஸ்
ரிஸ்வான் அசாருதீன் துபைல் அகமது யஹ்யா அயாஷ்,சகில்,பாசில் உட்பட பலர் கலந்து கொண்டனர்
0Shares