கோவையில் நடைபெற்ற மேஜிக் நிகழ்ச்சி
![]()
கோவை சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்ற சிந்தனை செய் டேலன்ட் பிஸ்ட் 2026 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சிறப்பு குழந்தைகளுக்காக மேஜீக் நிகழ்ச்சி செய்து அசத்திய பிரபல மேஜிக் கலை நிபுணர் டாக்டர் டிஜோ வர்கிஷ்!!
மேஜிக் என்றழைக்கபடும் மந்திரஜாலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுவாரசியமான மேடை நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியை கடந்த 25 ஆண்டுகளாக செய்து வருபவர் டாக்டர் டிஜோ வர்கிஷ். இவர் கடந்த வந்த பாதையில், பல்வேறு சாதனைகளை கட்டியுள்ளார். குறிப்பாக, 25 நாடுகளுக்கும் மேலாக சென்று தனது மாயாஜால நிகழ்ச்சிகளை செய்துள்ளார். இதற்காக, முதல்முறையாக ஆஸ்கர் ஆஃப் மேஜிக் என்ற இன்டர்நேஷனல் மெர்லின் அவார்டுகளை இவர் பெற்றுள்ளார். மாயாஜாலத்துறையில் இந்த விருது இது மிகப் பெரிய விருதாக கருதப்படுகின்றது. மேலும் 150 உலக சாதனைகளும், நேஷனல் தேசிய அளவிலான விருதுகளும், ஆசியா விருதுகளும், சர்வதேச விருதுகள் என இதுவரை, சுமார், 4000த்திற்க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளார். மேலும் தனது சேவை மனப்பான்மையின் மூலமாக, இந்த கலையை அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில், கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிபிஜி பொறியியல் கல்லூரியில், நன்மை செய் அறக்கட்டளை சார்மாக, அதன் நிறுவனர்
பிரேம், மற்றும் இணை நிறுவனர் கிறிஸ்டி இவாஞ்சலின், ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நன்மை செய் டேலன்ட் பிஸ்ட் 2026 எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது திறமைகளை வெளிபடுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கோவை மாவட்டம் மட்டுமின்றி, திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு குழந்தைகள் வந்திருந்தனர் அத்தகைய சிறப்பு சிறப்பு குழந்தைகளை மகிழ்ச்சி படுத்தும் வகையில் தனது மாயாஜால வித்தைகளை மேடையில் செய்து அசத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டாக்டர் டிஜோ வர்கிஷ் கூறியதாவது..
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மாயாஜால நிகழ்ச்சி என்றால் ரசித்து பார்ப்பது உண்டு. அத்தகைய நிகழ்ச்சியை, சிறப்பு குழந்தைகள் கண்டு ரசிப்பதும், அவர்கள் மகிழ்ச்சியில் திளைப்பதும், எனது மகிழ்ச்சிக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சி. அத்தகைய நிகழ்ச்சியை இந்த சிறப்பு குழந்தைகளுக்காக தான் இலவசமாக செய்தது, இது வரை தான் வாங்கிய பல்வேறு விருதுகளை பின்னுக்கு தள்ளி உள்ளதாக நான் பெருமை கொள்கின்றேன். ஏனெனில் சிறப்பு குழந்தைகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய சந்தோஷம் தனக்கு கிடைத்துள்ளது. இது தான் வாங்கிய விருதுகளில் மிக சிறந்த விருதாக தான் கருதுவதாக கூறினார்.

