கோவை வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Loading

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக, கோவை ரயில் நிலைய பகுதியில், உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் வடிவேலு கூறியதாவது.. தமிழகத்தில் 24 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைமையகம் முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, விவசாய கடன்கள் வழங்குவதை முடக்க கூடாது, விவசாய கடன்களை குறைத்து விட்டு பிற கடன்கள் வழங்க இலக்கு நிர்ணயிப்பதை கைவிட வேண்டும், கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை முடக்கும் முறையை கைவிட வேண்டும், வங்கியில் நியதிக்கு மாறான ஆணைகளை திரும்ப பெற வேண்டும், வங்கி பணியில் தொழில்நுட்ப சேவைகளை மேம்படுத்த வேண்டும், கல்வி சலுகைகள் மாநிலம் முழுவதும் சீராக வழங்கப்பட வேண்டும், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியை இரண்டாகப் பிரித்து, திருப்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிரித்தால் வங்கிகளின் வளர்ச்சி பாதிக்கும். சிறிய வங்கிகளாக மாறிவிடும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 24 என்பதை தற்போது 12 என இணைத்துள்ளார்கள், மேலும் 4 வங்கிகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. இது அரசியல் காரணங்களுக்காக செயல்படுவதாக உள்ளது. எனவே இந்த கொள்கையை கைவிட வேண்டும் என்பது போன்ற 17 பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்துவதாகவும், இந்தப் போராட்டம் குறித்து பதிவாளருக்கு வாட்ஸ் அப் வாயிலாகவும், மனுக்கள் வாயிலாகவும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த போராட்டங்களுக்கு பின்னும் மாநில பதிவாளர் உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், வரும் 28ஆம் தேதி மாவட்ட அளவில் தர்ணா போராட்டமும், அதன் பின்பு வேலை நிறுத்த போராட்டங்களையும் முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கணேஷ் ராம்குமார், கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சையது இப்ராஹிம், கோவை மாவட்ட நகர வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் மோகன்ராஜ், கோவை, திருப்பூர் நீலகிரி, மாவட்ட தொடக்க வேளாண்மை தலைவர் பொண்னுச்சாமி, கோவை மாவட்ட டாக்பியா சங்க பொதுச்செயலாளர் ஆனந்தன், கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்க பணியாளர்கள் யூனியன் கோவை மண்டல பொதுச் செயலாளர் மணிவண்ணன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க இணை செயலாளர் மருதாச்சலமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares