கோவை முதல்முறை கல்லூரிக்கு வந்த மாணவர்கள்

Loading

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கேஜி சுகாதார அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது! கல்லூரிக்கு முதல்முறை வருகை தரும் மாணவர்களின் பயத்தை நீக்கும் நிகழ்ச்சியாக நடைபெற்றது. 
கோவை சரவணம்பட்டி பகுதியில் கேஜி சுகாதார அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. சுகாதார துறை சார்ந்த மாணவர்களின், கல்விப் பயணத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கே.ஜி செவிலியர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சோனியா தாஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். அப்பொழுது புதிதாக, சேர்ந்துள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுக்கு உள்ள அச்சத்தை நீக்கும் வகையிலும், இத்துறையில் மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தார். சுகாதாரத் துறையில் வெற்றிகரமான தொழில் முறை வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு தேவையான அறிவு, ஒழுக்கம், மற்றும் தொழில்முறை பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியத்தை எடுத்துரைத்தார். தொடர்ந்து கேஜி சுகாதார அறிவியல் கல்லூரியின், 31 ஆண்டு கால பயணத்தை எடுத்துரைக்கும் காட்சி பதிவை, கானோளி வாயிலாக, டாக்டர் மனோஜ் ஆபிரகாம் முன்னிலையில் திரையிடப்பட்டது. இதில் கல்லூரியின் வளமான பாரம்பரியம், சாதனைகள், வளர்ச்சி, மற்றும் தரமான சுகாதார கல்வியை வழங்குவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றை மாணவர்கள் தெரிந்து கொண்டனர். மேலும் நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையையும், சுகாதாரத் துறைக்கு, சேவைசெய்து வரும், நீண்ட கால பங்களிப்பையும், புதிய மாணவர்கள் பகிர்ந்து கொள்ள இந்த காட்சி பதிவு ஒரு விழிப்புணர்வாக அமைந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ் சொற்பொழிவாளர் டாக்டர் ஐ.எஸ் பிரவீன் சுல்தானா கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். தொடர்ச்சியாக கே.ஜி மருத்துவமனை மற்றும் கேஜி சுகாதார அறிவியல் கல்லூரியின் நிறுவன தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவச்சலம், சுகாதார துறை மாணவர்களுக்கு தமது தொலைநோக்கு பார்வையையும், வழிகாட்டுதலையும் வழங்கினார். நிகழ்வில் கேஜி மருத்துவமனை மற்றும் கே ஜி சுகாதார அறிவியல் கல்லூரியில் துணை தலைவி வசந்தி ரகு, கே.ஜி இணை சுகாதார அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஜோசபின் பிரின்சி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0Shares