பொதுப்பணித்துறை சங்க மண்டலக் கூட்டம்

Loading

ஈரோட்டில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்கள் சங்க மண்டலக் கூட்டம்: நிலுவைத் தொகையை விடுவிக்க வலியுறுத்தல்
தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தின் கோவை மண்டலத்திற்கு உட்பட்ட ஒன்பது மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் மண்டலப் பொதுக்கூட்டம் ஈரோடு ரோட்டரி சிடி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மண்டலத் தலைவர் தில்லைராஜன் தலைமை வகிக்க, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டத் தலைவர் உதயகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வம் சிறப்புரையாற்ற, மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், முதல்நிலை ஒப்பந்ததாரர் நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மாநில பொதுச்செயலாளர் கார்மேகம், ஈரோடு திருப்பூர் மாவட்டத் தலைவர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் முடிக்கப்பட்ட 80 சதவீதப் பணிகளுக்கு உரிய பணத்தை விடுவிக்காமல் அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக ஒப்பந்ததாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான உள்ளூர் பணிகளுக்கும், போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கும் ஆஃப்லைன் டெண்டர் முறையை அமல்படுத்தாமல், ஆன்லைன் முறையைக் கொண்டுவந்து ஒப்பந்ததாரர்களின் பணிச் சுமையையும் வாய்ப்புகளையும் அரசு பறித்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை 40 முதல் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ள நிலையில் அரசு அதனைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் பணிபுரிந்து வரும் சூழலில், தரக்கட்டுப்பாட்டைப் பரிசோதிக்க நான்கு அதிகாரிகள் மட்டுமே உள்ளதால் தேவையற்ற தாமதமும் பாதிப்பும் ஏற்படுகிறது. அரசு உடனடியாக ஒப்பந்ததாரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாநில அளவில் காலவரையற்ற உண்ணாவிரதம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர். இக்கூட்டத்தில் மாநில கௌரவத் தலைவர் பழனிவேல், மாநில துணைத் தலைவர்கள் மோகன், சிவகுமார், மாநிலச் செயலாளர் சுரேஷ்குமார், மாநிலப் பொருளாளர் மகேந்திரன், மாநில இணைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாநில துணைச் செயலாளர் சரபோஜி, மாநில மக்கள் தொடர்பு அலுவலர் பத்மநாபன், மண்டலச் செயலாளர்கள் பொன்னுசாமி, மதுசூதனன், முருகானந்தம், ஈரோடு திருப்பூர் மாவட்டச் செயலாளர் தனபால், பொருளாளர் மோகனசுந்தரம், கோவை நீலகிரி மாவட்ட நிர்வாகிகள் பாலசந்திரன், சரவணன், மகாலிங்கம், சேலம் மாவட்ட நிர்வாகிகள் மோகன், கார்மேகம், காமராஜ், கரூர் மாவட்ட நிர்வாகிகள் சதீஷ்குமார், கதிரவன், முருகானந்தம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் மகேந்திரன், சரவணன், நாகராஜன், தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் சின்னமுத்து, குமார், வேடியப்பன, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் அழகேசன், மதுசூதனன், பிரவீன்குமார் உள்ளிட்ட மாநில, மண்டல மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தின் நிறைவாக ஈரோடு திருப்பூர் மாவட்டச் செயலாளர் தனபால் நன்றி கூறினார்.
0Shares