கோவையில் பணி செய்த இடத்தில் கையாடல்

Loading

கோவை வேடப்பட்டி பகுதியில் பணியாற்றிய நிறுவனத்தில், இருந்து சுமார் 60 லட்சம் வரை மோசடி செய்து 90 லட்சத்தில் புதிய வீடு கட்டிய மேளாளர்! உரிய விசாரணை நடத்தி நிறுவனத்திற்கு சொந்தமான பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் நிறுவன உரிமையாளர் பரபரப்பு மனு !!! 
கோவை வேடபட்டி பகுதியை சேர்ந்தவர் 41வயதான
கணேஷ் குமார் இவர், அதே பகுதியில், கடந்த 2020ம் ஆண்டு முதல் சிட்டி டிரேடர்ஸ் என்ற பெயரில், சிமெண்ட், மணல், உள்ளிட்ட வீடுகள் கட்ட தேவையான மூலப்பொருட்களை மொத்தமாகவும், சில்லறை வணிகமாகவும் விற்பனை செய்து வருகின்றார். இவரது நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றி வந்தவர் அதே பகுதியை சேர்ந்த வருண் குமார். இவர் இந்த நிறுவனத்தில் பணியாற்ற மாதாமாதம் 45ஆயிரம் ரூபாய் சம்பளமாக பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரை சந்தித்து தனது வங்கி கணக்கின் மூலமாக தான் பணியாற்றும் நிறுவன உரிமையாளர் கனேஷ் குமார் குறித்து, பரபரப்பு புகார் மனுவை வழங்கினார். இதனை சில சமூக ஊடக நிறுவனங்கள் செய்தியாகவும் வெளியிட்டது. இதனை தொடர்ந்து இதன் உண்மை நிலவரம் என்ன என்று, இன்று கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார் கனேஷ் குமார். மேலும் இது குறித்து கனேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது..
தன்னிடம் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர் வருண் குமார். இவர் அலுவலக வரவு செலவு கணக்குகளை முறையாக பராமரிக்காமல் நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்தும், வாடிக்கையாளர்கள் நிறுவனத்திற்க்கு செலுத்த வேண்டிய பணத்தை, தனது பெயரில் வாங்கி சுமார் 60 லட்சம் வரை நிறுவனத்தை ஏமாற்றியுள்ளார். இதற்க்கு உடந்தையாக அவரது மனைவி உமா என்பவரும் செயல்பட்டு வருகிறார். நிறுவனத்திற்கு சொந்தமான பணத்தை கையாடல் செய்து தற்போது 90 லட்சத்தில் ஆடம்பர வீடு கட்டி வருகின்றார். அலுவலகத்தில் இது குறித்து உரிய ஆய்வு செய்த பொழுது வருண் குமார் சுமார் 60 லட்சம் ரூபாய் வரை, வாடிக்கையாளர்களின் பணத்தை தனது வங்கி கணக்கில் மோசடியாக பெற்று கொண்டு நிறுவனத்தை ஏமாற்றி வந்துள்ளார். மேலும் அவர் தற்போது நிறுவனத்திற்க்கு செலுத்த வேண்டிய தொகையை கணக்கிட்ட பொழுது 22,50,000 என தெரிய வந்துள்ளது இந்த பணத்தை பெற்று தர வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும் இது குறித்து இருவர் மீதும் வழக்கு தொடுத்துள்ளேன் விசாரணை நீதிமன்றத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்..
0Shares