நம்ம ஆபீஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனம் தொழில் முனைவோர் மாநாடு
![]()
ஈரோடு ஃபார்ச்சூன் சிட்டி டெக்ஸ்வேலியில் நம்ம ஆபீஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் மாநாடு
ஈரோடு கங்காபுரம் ஃபார்ச்சூன் சிட்டி டெக்ஸ்வேலியில் ‘நம்ம ஆபீஸ் ஸ்டார்ட்-அப்’ நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இதில் முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு டெக்ஸ்வேலி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் டி.பி. குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, முதலீடு மற்றும் மகளிர் தொழில் முனைவோர் குறித்த சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன. மேலும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே நேரடி சந்திப்புகளுக்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. கொங்கு மண்டலத்தில் முதன்முறையாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தங்கள் தொழில் திட்டங்களை முதலீட்டாளர்கள் முன்னிலையில் மேடையில் நேரடியாக விளக்கும் நிகழ்வும் நடைபெற்றது. அத்துடன், பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பில் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை நம்ம ஆபீஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான குமரேஷ் மற்றும் நம்ம ஆபீஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான செந்தில் ராஜா ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

