கோவை கல்லூரி மாணவர்களுக்கு இலக்கிய போட்டி
![]()
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான கலாச்சார விழா! திரைப்பட நடன இயக்குனர் சபரிஷ் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரல்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லுரியில், கல்லூரிகளுக்கு இடையிலான கலாச்சார விழா கரிஷ்மா 2026 எனும் தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளீர் கல்லூரியின் செயலாளரும் துணைத்தலைவருமான டாக்டர் யசோதா தேவி வரவேற்புரையாற்றினார். அப்பொழுது அவர் மாணவ மாணவியர்கள் மத்தியில் கூறியதாவது..
கல்லூரிகளுக்கு இடையிலான இக்கலாச்சார விழா மாணவ மாணவியர்களின் கலைத்திறன், படைப்பாற்றல், மற்றும் தனித்திறமைகளை வெளிபடுத்தும் வகையில் நடைபெற்றதாகவும், இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார் மாணவர்கள் தங்களுக்குள் இருக்கும் படைப்பாற்றலை அடையாளம் கண்டு அதனை தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார் தொடர்ந்து மாணவியர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிகள் மூலம் மாணவர்களுக்கு தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் புதிய அனுபவங்களை பெறுவதற்கும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் ஹாரத்தி வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடன இயக்குனர் சபரிஷ், கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுடன் சுமார் 20 நிமிடங்கள் குத்தாட்டம் போட்டார். மேலும் மாணவர்களையும் மேடைக்கு அழைத்து ஆட வருமாறு கூறினார் இதனை தொடர்ந்து சுமார் 50 மாணவியர்கள் மேடையில் நடன இயக்குனர் சபரிஷ் உடன் குத்தாட்டம் போட்டனர். இவர்களுடன் பேராசிரியர்களும் குத்தாட்டம் போட்டனர். மாணவ மாணவியர்கள் இருக்கையில் இருந்து கொண்டே நடனமாடியது கான்போரை உற்ச்சாக படுத்தியது. தொடர்த்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கபட்டது
தொடர்ந்து மாணவர் தலைவர் ஜெஸ்ஸிகா வர்ஷினி நன்றி கூறி விழாவை நிறைவு செய்தார்.

