கோவையில் இதய மருத்துவமனை திறப்பு
![]()
கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூரில், இதயத்திற்காக இதயத்தில் இருந்து என அவேரா இதய மருத்துவமனை, கோவையில் முதல் முறையாக வரும் அக்டோபர் நான்காம் தேதி திறக்கப்பட உள்ளது..
கோவை மாநகரில் இதய நோய்களுக்கான பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அவேரா இதய மருத்துவமனை, வரும் அக்டோபர் நான்காம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனை மூலமாக இதய நோய்களுக்கான முழுமையான சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக, அவேரா மருத்துவமனையின், தலைமை மருத்துவர் ராஜ்பால் அபைச்ந்த், மற்றும் டாக்டர் சந்திரசேகர், ஆகியோர் தெரிவித்துள்ளனர். மேலும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவர்கள் சந்திரசேகர், கூறியதாவது இதயத்திற்காக இதயத்தில் இருந்து என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த இதய நோய் மருத்துவமனை திறக்கபட உள்ளது. இங்கு, நிபுணத்துவம் வாய்ந்த, மேம்பட்ட தொழில்நுட்பம், மற்றும் ஒருங்கிணைந்த சிகிச்சை ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ், கொண்டு வரும் நோக்கத்தில் அவேரா இதய மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு மருத்துவமனையின் தனித்துவம், நேர்மை, நம்பிக்கை, மருத்துவ சிறப்பு துல்லிய தொழில்நுட்பம், மற்றும் கருணையான கவனிப்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறதாக தெரிவித்தனர். இம்மருத்துவமனையில் நூறு படுக்கையறைகள் கொண்ட மருத்துவமனை யாகவும், இதயம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதன் உள்கட்டமைப்பில் இரண்டு பிலிப்ஸ் அஸூரியன் செவன் சீரிஸ் கேத் லேப்கள், இரண்டு உலகத்திலும் வாய்ந்த கெட்டிங்கே மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள், 18 படுக்கைகள் கொண்ட இதய பராமரிப்பு பிரிவு, 16 படுக்கைகள் கொண்ட இதய மார்பக அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பிரிவு, மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைந்த படமெடுக்கும் தொழில்நுட்பத்துடன் கூடிய, பிலிப்ஸ் இன்சிசிவ் கார்டியாக் சிடி ஆகியவை அடங்கும் என்று தெரிவித்தனர். மேலும், இம்மருத்துவமனையில், இதயவியல், இதய மார்பக அறுவை சிகிச்சை, மயக்கவியல், தீவிர சிகிச்சை பிரிவு, மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, கதிரியக்கவியல், மற்றும் நுரையீரல் மருத்துவம் ஆகிய துறைகளின் சேவைகளை வழங்கும் எனவும், இவற்றுக்கு சிறுநீரகவியல், நரம்பியல், நாளமில்லா சுரப்பியில், பொது மருத்துவம், மற்றும் தோல் மருத்துவம், உள்ளிட்ட கூடுதல் சிறப்பு துறைகளும் உள்ளதாக தெரிவித்தனர். வார 7 நாட்களும், 24 மணி நேரமும் மருத்துவ சேவைகள், ஆம்புலன்ஸ் சேவைகள், மற்றும் மேம்பட்ட இதய மார்பக அறுவை சிகிச்சைகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தனர். மேலும், இந்த மருத்துவமனையை அக்டோபர் நான்காம் தேதி பண்ணாரி அம்மன் குழுமத்தின் தலைவர் எஸ் பி பாலசுப்ரமணியம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

