கோவையில் வீ த லீடர் அமைப்பு விழிப்புணர்வு பேரணி
![]()
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி ‘பசுமைப் பயணம்’ – 100 இருசக்கர வாகனங்களுடன் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில், வீ த லீடர்ஸ் இயக்கத்தின் சார்பில் ‘பசுமைப் பயணம்’ நடைபெற்றது.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து, பேசிய வீ தி லீடர்ஸ் நிவாகி கோபி கூறியதாவது..
சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு எனவும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகளில் அதிகளவில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்றார்.
கோவை, சுந்தராபுரம் அடுத்த குறிச்சி குளம் பகுதியில் இருந்து இந்த பசுமைப் பயணம் துவங்கி, தொடர்ந்து மயிலாடும் பாறை குட்டை, செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய வகையில் பயணம் நடைபெற்றது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டுநர்கள் பங்கேற்றனர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, நீர்நிலை பாதுகாப்பு மற்றும் பொறுப்பான வாகனப் பயன்பாடு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், மேலும், நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 100 மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். மரக்கன்றுகளை நடுவதுடன், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கான பொறுப்புணர்வையும் உருவாக்க வேண்டும் என நிகழ்ச்சியையும் தெரிவித்த அவர்,
இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த சுற்றுச்சூழல் முயற்சியில் பங்கேற்று ஆதரவு வழங்கி உள்ளதாக தெரிவித்தார் .“பசுமையான கோவை – சுத்தமான கோவை” என்ற நோக்கத்துடன் இந்தப் பசுமைப் பயணம் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றதாப தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

