இதயத்தை பாதுகாக்க வேண்டும் விழிப்புணர்வு

Loading

கோவை ரோட்டரி மாவட்டம் 3206, அமைப்பு, மற்றும் எஸ்விடி மருத்துவமனை சார்பாக நடைபெற்ற பல்ஸ் ஹார்ட் மாரத்தான் 2026! உங்கள் இதயம் உங்களை நேசிக்கிறது, நீங்களும் அதைத் நேசியுங்கள் எனும் தலைப்பில் நடைபெற்றது. 
கோவை காந்திபுரம் அடுத்த ராம் நகர் பகுதியில், ரோட்டரி மாவட்டம் 3206, அமைப்பின், வருடாந்திர கருப்பொருளான “ஒன்றிணைவோம்” என்பதன் கீழ், இளைஞர்கள் அதிகமாக இயங்கவும், ஆரோக்கியமான வாழ்வை வாழவும், நோய்த்தடுப்பை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில் ‘பல்ஸ் ஹார்ட்டத்தான்’ எனும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. எஸ்.பி.டி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியானது 5 கிலோ மீட்டர் தூர, பல்ஸ் ஹார்ட் மாரத்தானாக நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியின் நோக்கமாக, இதய ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய நல்வாழ்வுக்காக கோவை மக்களை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்தது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக
செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.ஐ. மாவட்டம் 3206-இன் மாவட்ட ஆளுநர் ஆர். எஸ். மாருதி கூறியதாவது..
துடிப்பில் இணையுங்கள், இதயத்திற்கு எரிபொருள் நிரப்புங்கள்” என்ற தலைப்பில், ரோட்டரி மாவட்டம் 3206, கோவை எஸ்பிடி மருத்துவமனை, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை மாவட்ட தடகள சங்கம் ஆகியவை இணைந்து இந்த ஹார்ட்டத்தான் எனும் 5 கி.மீ பல்ஸ் ஹார்ட் மாரத்தான், போட்டிகளை நடத்தி வருகின்றது, இதில், சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர், இந்த, மாரத்தான் போட்டியானது நடை, மெதுவோட்டம், ஓட்டம், மெதுவோட்டம், மீண்டும் நடை என்று நடைபெற்றது என்றார். கோவை ராம் நகரில் துவங்கி,கோவை நேரு மைதானத்தில் நிறைவு பெற்றதாகவும்,
நேரு மைதானத்தில் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், இந்திய மருத்துவ சங்க 2027-இன் தலைவர் டாக்டர் ஏ. கே. ரவிக்குமார், மற்றும் எமரால்டு குழுமத்தின் தலைவர் சீனிவாசன், முன்னிலையில், ரோட்டேரியன் டாக்டர் சுப்புராஜா உலக இதய தின விழிப்புணர்வு உரையாற்ற உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த மாரத்தான் பந்தயத்தில் கலந்து கொள்ளும், அனைவரது நாடித்துடிப்பு படிப்படியாக எப்படி அதிகரிக்கிறது என்று பரிசோதனைகள் செய்ய படுவதுடன், பொது இடங்களில், ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது, நாம் என்னென்ன முதலுதவிகள் அவர்களுக்கு செய்தால் அவர்களை காக்க முடியும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியும், செயல்முறை விளக்கமும் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாரத்தான் நிகழ்ச்சி தலைவர் ரோட்டேரியன் குர்பிரீத் சிங், நிகழ்வு இணைத் தலைவர் ரோட்டேரியன் காட்வின் மரியா விசுவாசம், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர் ரோட்டேரியன் டாக்டர் சுப்புராஜா, முதன்மை மன்றத் தலைவர் ரோட்டேரியன் சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளதாக கூறினார்.
0Shares