கோவை மாணவர்கள் தஞ்சையில் வெற்றி
![]()
தஞ்சாவூரில் நடைபெற்ற இண்டர்நேஷனல் சிலம்பம் போட்டியில் கோவை பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவிகள் அசத்தல்
இண்டர்நேஷனல் அளவிலான சிலம்பம் போட்டி தஞ்சாவூரில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் உள்ள உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இதில் கோவை பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் இதில் பெண்கள் 35 வயது பிரிவில் சாஹிதா பேகம் தனி திறமை போட்டியில் முதல் இடத்தை பிடித்தார் ஆண்கள் 15 வயதுகுட்பட்ட சிலம்பம் தொடு முறை போட்டியில் பர்ஹான் முதல் இடத்தை பிடித்தார் மேலும் யோகேஷ். தாஸீன். அபூபக்கர் சித்திக் ஆகியோர் சிலம்பம் தொடுமுறை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது வெற்றி பெற்றனர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு கோப்பை வழங்கப்பட்டது மேலும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பெஸ்ட் வே மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி நிறுவனர் சிலம்பம் மாஸ்டர் சிஹான் ஜெமிஷா அவர்கள் பாராட்டினார்.

