கோவையில் நடைபெற்ற இளைஞர்களுக்கான மாநாடு
![]()
கோவையில் இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு, தமிழகத்தில் இருந்து சுமார் 10,000பேர் பங்கேற்றுள்ளதாக மாநாட்டின் தலைவர் பேட்டி..
இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 கோவை நீலாம்பூர் பகுதியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 10000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒரு நாள் நடைபெறும் இந்த மாநாட்டில் 12 மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சுமார், 30-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர். நான்கு அறிவுசார் அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளுக்கான கண்காட்சியும் இடம்பிடித்துள்ளது.
தொழில்முனைவு, தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, நிதி, தலைமைத்துவம், புத்தாக்கம், அறிவியல், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் பயிலரங்குகள் நடைபெற்றது
இந்த மாநாட்டின் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்த மாநாடு திட்ட தலைவர் சுரபி கார்த்திக் கூறியதாவது.. 40-க்கும் மேற்பட்ட நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று 4,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களிடம் இம்மாநாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பட்டுள்ளது.
இளைஞர்களிடம் திறமை, கல்வி மற்றும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தபோதிலும், வழக்கமான வேலைவாய்ப்புகளுக்கு அப்பால் உள்ள வாய்ப்புகள் குறித்து பலர் அறிந்திருக்கவில்லை. வேலைவாய்ப்புகளைத் தேடுவதிலிருந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மனநிலைக்கு இளைஞர்களை அழைத்துச் செல்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என தெரிவித்தார். இந்த மாநாட்டில், டாக்டர் ஏ. கலியமூர்த்தி, ஐபிஎஸ், ஜி.ஆர். ராதாகிருஷ்ணன், ஜிஆர்டி குழும நிர்வாக இயக்குநர், ஜி.ஆர். அனந்தபத்மநாபன், ஜிஆர்டி குழும நிர்வாக இயக்குநர், ஓய்வுபெற்ற மேஜர் மதன் குமார், மதுரை வீரன் மாரிமுத்து, குரு மித்ரேஷிவா, கே. அண்ணாமலை உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

