டாக்டர் பட்டம் வாங்கி கோவை வந்த கராத்தே மாஸ்டர்

Loading

சென்னை மயிலாப்பூரில் சர்வதேச தமிழ் பண்பாட்டு பல்கலைக்கழகம் சார்பாக, நடைபெற்ற விழாவில், கௌரவ முனைவர் பட்டம் பெற்ற கோவை கராத்தே பயிற்சியாளர் யோக சுந்தரத்திற்கு கோவை ரயில் நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது 
கோவையை சேர்ந்தவர் டாக்டர் டி யோகசுந்தரம் இவர், மலேசியா
6வது, டான் ப்ளாக் பெல்ட்
தேசிய நடுவராகவும், உலக சிலம்ப விளையாட்டு சங்கத்தின்
சிலம்ப ஆசானாகவும் இருந்து வருகிறார் மேலும் கோவையில்,
யோகாஸ் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, குழந்தைகளுக்கும், பள்ளி, மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்குமு சிறப்பாக சிலம்பம், மற்றும் யோகா பயிற்சிகளை வழங்கி வருகிறார். கடந்த 30 வருடமாக கராத்தே பயிற்சியில் ஈடுபட்டுள்ள இவர், சுமார், 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். கடந்த 20 வருடமாக இவரது அகாடமியில் பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கு கராத்தே, மற்றும் சிலம்பம் உள்ளிட்ட கலைகளை நுணுக்கமாக பயிற்சியளித்து வருகிறார். மேலும் அரசுப் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கும், ஏழை எளிய பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் மிகவும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்து, மாவட்டம், மாநிலம், மற்றும் தேசிய அளவிலான கராத்தே, மற்றும் சிலம்பம் போட்டியில் பங்கேற்க வைத்து பல்வேறு பரிசுகளையும் பெற வழிவகை செய்துள்ளார். மேலும் இவரது மாணவ, மாணவிகள் பலரும், கல்லூரிகளில் ஸ்போர்ட்ஸ் கோட்டா பிரிவில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
இவரது பயிற்சி மையத்தில் கராத்தே பயிற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் தொடர்ந்து 2:30 மணி நேரம் கராத்தே போட்டிகளில், கட்டா பயிற்சி செய்தும், சிலம்ப மாணவர்கள் தொடர்ந்து 5 மணி நேரம் 15 நிமிடம் சிலம்பம் சுற்றியும் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இவரது சேவையா பாராட்டும் விதமாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் அரங்கில், சர்வதேச தமிழ் பண்பாட்டு பல்கலைக்கழகம் சார்பாக, நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவ முனைவர் பட்ட விழா இவருக்கு வழங்கி பெருமை படுத்தி உள்ளது. இவருக்கு முனைவர் பட்டத்தை, திரைப்பட நடிகை அம்பிகாவும், க்ராண்ட் மாஸ்டர் இவருக்கு கராத்தே வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்கினார். விருதை பெற்ற யோகசுந்தரம் இன்று ரயில் மார்க்கமாக கோவை வந்தடைந்தார் அவர்க்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்க பட்டது.
0Shares