கோவையில் நடைபெற்ற கலப்பு திருமணம்
![]()
கோவை
கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கலப்பு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது..
கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் இன்று கலப்பு திருமணம் நடைபெற்றது. புதுக்கோட்டை, அடுத்த சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜா 21
வயதான இவர், அதே போல புதுக்கோட்டையை சேர்ந்த வினோதினி என்ற 23 வயது பெண்ணை, கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் இருவரது வீட்டிலும், இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. மணமகன் வீட்டினர் முன்னிலையில், இந்து முறைப்படி, தாலி கட்டி, தனது மனைவியாக வினோதினியை மோகன் ராஜ் ஏற்று கொண்டார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கபட்டது. இந்த நிகழ்வில்,
வழக்கறிஞர் குமாஸ்தாக்கள் திவ்யா, லட்சுமி, செல்வராஜ், இ – சேவை மையம் பொண் முருகன், செல்வபுரம் மீரான் கனி, வைத்தியர் பாலகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

