கோவை மாவட்டஆட்சியர் தனியார்பள்ளிவாகன ஆய்வு
![]()
கோவை
கட்டாய கல்வி உரிமை திட்டத்தில் , சேர்ந்துள்ள மாணவர்களிடம் பிற மாணவர்களுக்கு இணையாக கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் ஆய்வு மேற்கொள்ள துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கோவையில் எச்சரித்துள்ளார்
கோவை பி ஆர் எஸ் மைதானத்தில்
கோவை மாவட்டத்தில் புதிய கல்வியாண்டை முன்னிட்டு தனியார் பள்ளி பேருந்துகள் மீது தீவிர ஆய்வினை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மேற்கொண்டார். மாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள 1775 பள்ளி வாகனங்களில் 562 வாகனங்கள் ஆய்விற்கு வராததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆய்வுக்குபின் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ,
ஆய்வுக்கு வந்த வாகனங்களில் சுமார் 30 பேருந்துகளில் சிறிய அளவிலான பழுதுகள் மற்றும் குறைபாடுகள் கண்டறியப்பட்டதாகவும், அவற்றை ஒரு வாரத்திற்குள் சரிசெய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஃபிட்னஸ் சான்றிதழ் இல்லாதது, மாணவர்கள் ஏறும் பிளாட்பாரம் வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் 5 பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் ,
பள்ளி பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்பட வேண்டும் என்றும், அவசர கால சூழ்நிலைகளில் பயன்படுத்த தீயணைப்பான் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டு
அதில், ஓட்டுநர்களின் கண்பார்வை பரிசோதனை, அவசர வெளியேறும் கதவுகளை பயன்படுத்தும் முறை, மாணவர்களின் பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுவதாக வும், அதேபோல், பள்ளி பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்றும், அது தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்ந்துள்ள
மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக குறிப்பிட்ட பள்ளிகள் மீது புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஓட்டுநர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக புகார்கள் வந்தாலும் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது விசாரணை நடத்தப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.

