ஈரோட்டில்17-வது மாதமாக 2000 பேருக்கு அன்னதானம் 

Loading

ஈரோடு
ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் 17-வது மாதமாக 2000 க்கும் மேற்பட்டோருக்கு   அன்னதானம்
ஈரோடு தாளவாடி தலைமலை தொட்டபுரம் ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து, கடந்த இரண்டு வருடமாக  தங்களது சேவையைத் தொடர்ந்துள்ளனர்.  ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, 17-வது மாதமாக அன்னதானம் நடைபெற்றது. ஆஞ்சநேயர் படத்திற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்ற பின்பு அன்னதானம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயரை பற்றிய பாடல் மோகன் அவர்கள் இயற்றியமைக்காக அவருக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது
இந்த நிகழ்விற்கு  முன்னிலை லக்காபுரம் பவர் கனெக்ட் உரிமையாளர் பாலாஜி சிறப்பு அழைப்பாளர்கள் கலைமகள் கல்வி நிலைய உரிமையாளர் பேரன் ஜெ. சிவகுமார், ஏடி அரிசி மண்டி காமராஜ், மணியன் மில் ஸ்டோர் சுரேஷ், கோவில் அறங்காவலர்கள், அன்னதான கமிட்டியின் நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்துகொண்டு 2000-க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெரியவர்கள்,  முதியோர்களுக்கு உணவை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சார்பாக ஈரோடு கொங்கலம்மன் கோவில் வீதியிலும் சுமார் 700 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் திருக்கோவில் அறக்கட்டளை சார்பாக தாளவாடியில் அமைந்துள்ள மனநல காப்பகத்தில் 250 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
0Shares