பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை
![]()
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை :
திருவள்ளூர் மே 11 : திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர்.
திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025-26 -ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் 380 பேர் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வை எழுதினர். இந்தப் பள்ளியைச் சேர்ந்த அ.ஹர்ஷினி -596 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
கணிதம் -100, வேதியியல் -100, கணினி அறிவியல் -100 ஆகிய 3 பாடங்களில் சதம் பெற்றுள்ளார். அதேபோல் , எஸ்.சுகந்தி -594 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவர் வணிகவியல் -100, கணக்கியல் -100, வணிக கணிதம் -100, பொருளியல் -100 ஆகிய 4 பாடங்களில் சதம் பெற்றுள்ளார்.
அதேபோல், வி.கே.ஓ. யுவனேஷ் என்ற மாணவர் 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார். கணக்கியல் -100, வணிக கணிதம் -100, பொருளியல் -100 ஆகிய பாடங்களில் சதம் பெற்றுள்ளார். அதேபோல், 45 மாணவர்கள் 100/100 மதிப்பெண்களும், 79 பேர் 99/100 மதிப்பெண்களும், 77 பேர் 98/100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.மேலும் 19 பேர் 580 க்கும் மேல் மதிப்பெண்களும், 67 பேர் 550 க்கும் மேல் மதிப்பெண்களும், 166 பேர் 500 க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.இந்த நிலையில் மாநில அளவில் சாதனை படைத்து சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தாளாளர் விஷ்ணு சரண், பள்ளி முதன்மை செயல் அலுவலர் பரணிதரன், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப், பள்ளி துணை முதல்வர் கவிதா கந்தசாமி,ஆசிரியர்கள் ஆகியோர் பாராட்டி இனிப்புகளை வழங்கினர்.

