10 சட்டமன்ற தொகுதியில் 26 லட்சத்து 85 ஆயிரத்து 228 பேர் வாக்களித்தனர்

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் 26 லட்சத்து 85 ஆயிரத்து 228 பேர் வாக்களித்தனர் : மொத்தம் 83.65 சதவிகித வாக்குகள் பதிவு : 

திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெற்று முடிந்த தேர்தலில் 26 லட்சத்து 85 ஆயிரத்து 228 பேர் வாக்களித்த நிலையில், மொத்தம் 83.65 சதவீதம் வாக்குகள் பதிவானதாக ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆண்கள் -15,69,312, பெண்கள் -16,40,283, மூன்றாம் பாலினத்தவர் -618 பேரும் என மொத்தம் 32 லட்சத்து 10 ஆயிரத்து 213 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் -13,17,908, பெண்கள் -13,67,053, மூன்றாம் பாலினத்தவர் -267 பேரும் என மொத்தம் 26 லட்சத்து 85 ஆயிரத்து 228 பேர் வாக்களித்துள்ளனர். அதன்படி, ஆண்கள் 83.34 சதவீதமும், பெண்கள் – 83.34 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர் 43.20 சதவீதம் என மொத்தம் 83.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதன்படி தொகுதி வாரியாக பதிவான வாக்குகள் விவரம் :கும்மிடிப்பூண்டி: ஆண்கள் -1,23,359, பெண்கள் -1,30,734, மூன்றாம் பாலினத்தவர் -36 என மொத்தம் 2,54,129 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் -1,12,898, பெண்கள் -1,17,938, மூன்றாம் பாலினத்தவர் -20 என மொத்தம் 2,30,856 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்கள் -91.52, பெண்கள் -90.21, மூன்றாம் பாலினத்தவர் -55.56 என 90.84 சதவீதமாகும்.பொன்னேரி (தனி) தொகுதி: ஆண்கள் -1,22,296, பெண்கள் -1,29,066, மூன்றாம் பாலினத்தவர் -35 என மொத்தம் 2,51,397 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் – 1,11,151, பெண்கள் -1,14,489, மூன்றாம் பாலினத்தவர் -25 என மொத்தம் 2,25,665 வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர். அதன்படி, ஆண்கள் -90.89, பெண்கள் -88.71, மூன்றாம் பாலினத்தவர் -71.43 என மொத்தம் 89.76 சதவீதமாகும்.

திருத்தணி: ஆண்கள் -1,29,401, பெண்கள் -1,32,431, மூன்றாம் பாலினத்தவர் -25 என மொத்தம் 2,61,857 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் -1,16,355, பெண்கள் -1,19,341, மூன்றாம் பாலினத்தவர் -13 மொத்தம் 2,35,709 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்கள் – 89.92, பெண்கள் -90.12, மூன்றாம் பாலினத்தவர் -52 என மொத்தம் 90.01 சதவீதமாகும். திருவள்ளூர்: ஆண்கள் -1,22,198, பெண்கள் -1,28,784, மூன்றாம் பாலினத்தவர்-36 என மொத்தம் 2,51,018 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் – 1,10,286, பெண்கள் – 1,14,322, மூன்றாம் பாலினத்தவர் -16 என மொத்தம் 2,24,624 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்கள் -89.49, பெண்கள் – 88.77, மூன்றாம் பாலினத்தவர் -44.44 என மொத்தம் 89.49 சதவீதமாகும்.பூந்தமல்லி(தனி): ஆண்கள் -1,79,137, பெண்கள் -1,89,428, மூன்றாம் பாலினத்தவர் -69 என மொத்தம் -3,68,634 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் -1,50,321, பெண்கள் -1,56,715, மூன்றாம் பாலினத்தவர் -34 என மொத்தம் 3,07,070 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்கள் -83.91, பெண்கள் – 82.73, மூன்றாம் பாலினத்தவர் -49.28 என மொத்தம் 83.30 சதவீதமாகும். ஆவடி: ஆண்கள் -2,13,146, பெண்கள் – 2,22,955, மூன்றாம் பாலினத்தவர் -75 என மொத்தம் 4,36,177 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் -1,67,972, பெண்கள் – 1,75,466, மூன்றாம் பாலினத்தவர் -22 என மொத்தம் 3,43,460 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்கள் -78.81, பெண்கள் -78.70, மூன்றாம் பாலினத்தவர் – 28.95 என மொத்தம் 78.74 சதவீதமாகும்.

மதுரவாயல்: ஆண்கள் -1,83,965, பெண்கள் -1,89,237, மூன்றாம் பாலினத்தவர் -81 என மொத்தம் 3,73,283 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் -1,44,065, பெண்கள் -1,48,421, மூன்றாம் பாலினத்தவர் -17 என மொத்தம் 2,82,593 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்கள் -78.31, பெண்கள் – 78.43, மூன்றாம் பாலினத்தவர் -20.99 என மொத்தம் 78.36 சதவீதமாகும். அம்பத்தூர்: ஆண்கள் -1,65,363, பெண்கள்-1,71,598, மூன்றாம் பாலினத்தவர் – 58 என மொத்தம் 3,37,019 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் – 1,27,975, பெண்கள் – 1,30,989, மூன்றாம் பாலினத்தவர் -11 என மொத்தம் 2,58,975 பேர் வாக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்கள் -77.39, பெண்கள் – 76.33, மூன்றாம் பாலினத்தவர் -18.93 என மொத்தம் 76.84 சதவீதமாகும்.

மாதவரம்: ஆண்கள் -2,11,240, பெண்கள் – 2,20,475, மூன்றாம் பாலினத்தவர் – 81 என மொத்தம் 4,31,796 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் -1,76,476, பெண்கள் -1,83,543, மூன்றாம் பாலினத்தவர் – 33 என மொத்தம் 3,60,052 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்கள் -83.54, பெண்கள் – 83.25, மூன்றாம் பாலினத்தவர் -40.74 என 83.38 சதவீதமாகும்.திருவொற்றியூர்: ஆண்கள் -1,19,207, பெண்கள் -1,25,575, மூன்றாம் பாலினத்தவர் -121 என மொத்தம் 2,44,903 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் -1,00,409, பெண்கள் -1,05,829, மூன்றாம் பாலினத்தவர் -76 என மொத்தம் 2,06,314 பேர் வாக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆண்கள் -83.98, பெண்கள் -83.34, மூன்றாம் பாலினத்தவர் -62.81 என மொத்தம் 84.24 சதவீதமாகும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப்  தெரிவித்துள்ளார்.

0Shares