சேலம்மேற்குதொகுதிபாமகவேட்பாளர்மு.கார்த்திஅறிமுககூட்டம்

Loading

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் கடுமையாக உழைத்து மேற்கு தொகுதியில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்குமாறு அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் கேட்டுக் கொண்டார்.

சேலம் மேற்கு தொகுதி பாமக வேட்பாளர் மு.கார்த்தி அறிமுக கூட்டம் இரும்பாலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
மேற்கு தொகுதியிலிருந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தொண்டர்கள் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் உற்சாகமாக பங்கேற்றனர்.
வேட்பாளர் கார்த்திக்கு சால்வை அணிவித்தும், ஆள் உயர மாலை அணிவித்தும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் வேட்பாளர் மு.கார்த்தியை அறிமுகம் செய்து கூட்டணி கட்சி தொண்டர்கள் அயராது உழைத்து மாம்பழம் சினத்திற்கு வாக்கு சேகரித்துக் கொடுத்து மாபெரும் வெற்றியை தேடி தருமாறு கேட்டுக் கொண்டார்.
மேற்கு தொகுதியில் சிலர் சூழ்ச்சியில் ஈடுபடுவார்கள். அதனை முறியடிக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜக சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், மாவட்ட தலைவர் சசிகுமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொருளாளர் செல்வம், அதிமுக மாவட்ட பொறுப்பாளர் சிங்காரம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
0Shares