திமுக வுக்கு அகிலஇந்திய ஜனநாயக மக்கள்நலப்பேரவை ஆதரவு
![]()
திமுக தலைமையிலான கூட்டணிக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை முழு ஆதரவு
தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டு காலமாக மக்கள் நலனை மையமாகக் கொண்டு பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வரும் முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி, சமூகநீதி, சமத்துவம் மற்றும் வளர்ச்சியை ஒருங்கிணைத்த திராவிட மாடல் ஆட்சி எனப் பொதுமக்களிடையே உயர்ந்த மதிப்பை பெற்றுள்ளது.
பெண்கள் முன்னேற்றத்தை முன்னிறுத்தி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் (பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்),மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கூடுதல் கடனுதவி,அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை மற்றும் அதிகாரம் வழங்குதல்போன்ற பல்வேறு திட்டங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தமிழகம் தொழில், கல்வி, மருத்துவம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, பொது போக்குவரத்து மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றம் பெற்று, இந்தியாவின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. அனைத்து மதத்தினரும் சமத்துவத்துடன், சகோதரத்துவ உணர்வுடன் வாழும் பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றுள்ளது.
மத்திய அரசின் பல்வேறு நெருக்குதல்களை அஞ்சாமல் எதிர்கொண்டு,சமூகநீதி கொள்கைகளை பாதுகாத்தல்,இருமொழிக் கொள்கையை உறுதியாக நிலைநிறுத்தல், மாநில சுயாட்சி மற்றும் சுயமரியாதையை காக்கும் நடவடிக்கைகள்என பல்வேறு துறைகளில் உறுதியான நிர்வாகத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், எதிர்வரும் 17வது தமிழக சட்டமன்றத் தேர்தல் (23.04.2026) முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை தனது நிபந்தனையற்ற முழு ஆதரவை அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிர்வாகிகள், பொதுச் செயலாளர் டாக்டர் S. ராஜசேகர் அவர்களின் தலைமையில், இன்று (02.04.2026) காலை அண்ணா அறிவாலய வளாகத்தில் திமுக அமைப்புச் செயலாளர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களை நேரில் சந்தித்து, ஆதரவு கடிதத்தை வழங்கினர்.
இந்நிகழ்வில்,தலைமை நிலைய செயலாளர் திரு.R.கார்த்திக்,மேலாளர் திரு.R.சிவகுமாரன், நிர்வாகிகள் திரு.T.வினோத் (வடசென்னை கிழக்கு மாவட்டம்), திரு. M. ஹரிஷ் குமார் (ஆர்.கே.நகர் தொகுதி தலைவர்),திரு.R.சுபாஷ் (துணைத் தலைவர், ஆர்.கே.நகர்), திரு.M.ஹரி தர்ஷன் (துணைச் செயலாளர், திருவொற்றியூர் தொகுதி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவை, தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக முழுமையாக செயல்பட்டு, மகத்தான வெற்றியைப் பெறச் செய்வோம் என உறுதிமொழி எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது

