பேருந்து மீது கார் மோதி விபத்து கணவன் மனைவி பலி

Loading

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் அரசு பேருந்து மீது கார் மோதிய  விபத்தில் கணவன் மனைவி பலி : பேத்திகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர் :

திருவள்ளூர் மார்ச் 30 : திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பாலாஜி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். (65). இவரது மனைவி கீதா (56). இவர்கள் தங்களது மகன் வயிற்று பேத்திகளுடன் திருவள்ளூரில் உள்ள கோயிலுக்கு செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

செவ்வாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் காரில் சென்ற ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த அவரது மனைவி கீதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த அவருடைய பேத்திகள் இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.கார் இயக்கிய ரவிச்சந்திரன் மாரடைப்பு ஏற்பட்டு கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நடந்ததா என்பது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0Shares