அதிமுக வேட்பாளர் பி. வி. ரமணாவுக்கு வரவேற்பு
![]()
திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி. வி. ரமணாவுக்கு வரவேற்பு :
திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியின் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா அறிவித்ததை தொடர்ந்து கூட்டணி கட்சியினருடன் அம்பேத்கர் மற்றும் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 7 அதிமுகவிற்கும், மீதமுள்ள 3 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கும் ஒதுக்கப்படவுள்ளன. இந்த நிலையில் அதிமுக தலைமை 7 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தது. அதில் திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதியில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகளுடன் ஆயில் மில் பகுதியில் உள்ள அம்பேத்கர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் காந்தி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதையடுத்து கூட்டணி கட்சியினருடன் வெற்றி பெறவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பின்னர் அதிமுக மேற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனையும் மேற்கொண்டார். அப்போது, உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் திரளாக பங்கேற்றனர்.