திருவள்ளூர் மாவட்டத்தில்7 வேட்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
![]()
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் 7 வேட்பாளர்கள் : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு :
திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பி.வி.ரமணா இதற்கு முன் 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் இஏபி சிவாஜியிடம் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். திமுக வேட்பாளர் இஏபி சிவாஜி 64378 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பிவிரமணா 55454 வாக்குகளும் பெற்றதால் தோல்வி அடைந்தார்.
2-வது முறையாக 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் இஏபி சிவாஜியிடம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் இஏபி சிவாஜி 67689 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பி வி ரமணா 91337 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றார். 2016 தேர்தலில் போட்டியிடவில்லை… அதிமுக சார்பில் கமாண்டோ பாஸ்கரன் என்பவர் போட்டியிட்டார்.
3-வது முறையாக முன் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனிடம் போட்டியி ட்டு தோல்வியை தழுவினார். திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் 106316 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா 85008 வாக்குகளும் பெற்றதால் தோல்வி அடைந்தார். மொத்தத்தில் அதிமுக வேட்பாளர் பிவி.ரமணா 3 முறை போட்டியிட்டு 2 முறை தோல்வியை தழுவியுள்ளார். திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் 2 முறை போட்டியிட்டு 2 முறையும் அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணாவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக (7) சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதன்படி கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக சார்பில் பூண்டி ஒன்றிய செயலாளர் வி.சுதாகர் போட்டியிடுகிறார். பொன்னேரி தொகுதியில் அதிமுக சார்பில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ.வுமான சிறுணியம் பலராமன் போட்டியிடுகிறார். திருத்தணி தொகுதியில் அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் கோ.அரி போட்டியிடுகிறார்.திருவள்ளூரில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி. ரமணா போட்டியிடுகிறார்.
மாதவரம் தொகுதியில் அதிமுக சார்பில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி. மூர்த்தி போட்டியிடுகிறார்.மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் மத்திய மாவட்ட செயலாளருமான பா. பென்ஜமின் போட்டியிடுகிறார். திருவொற்றியூர் தொகுதியில் அதிமுக சார்பில் திருவொற்றியூர் பகுதி கழக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ.வுமான கே.குப்பன் போட்டியிடுகிறார். இதே போல் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மற்ற 3 தொகுதிகளான பூந்தமல்லியில் அமமுகவும், ஆவடியில் பாஜகவும், அம்பத்தூரில் பாமகவும் போட்டியிடும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

