வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடு

Loading

ஈரோடு
ஈரோடு மாவட்ட சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: காவல்துறை கொடி அணிவகுப்பு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 23.04.2026 அன்று நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகின்ற 04.05.2026 அன்று சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளின் போது எவ்விதமான சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், மாவட்ட காவல்துறை சார்பில் பல்வேறு பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் **D.V.கிரண் ஸ்ருதி, இ.கா.ப.** அவர்களின் உத்தரவின் பேரில், இன்று (02.05.2026) ஈரோடு நகரம், பெருந்துறை மற்றும் கோபி காவல் நிலைய சரகங்களில் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சம்மந்தப்பட்ட உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில், உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள், ஆளினர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை, சிறப்பு இலக்கு படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என ஏராளமானோர் திரளாகக் கலந்து கொண்டனர். பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கையை நடத்தி முடிக்கவும் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0Shares