கோவையில் மழலையர் பள்ளி ஆண்டு விழா

Loading

கோவை
கோவை காளபட்டி அடுத்த நேரு பகுதியில் ஃபால்ஸ் எஜுகேஷனல் டிரஸ்ட் சார்பாக இயங்கி வரும் ஃபர்ஸ்ட்‌க்ரை இன்டெல்லிடாட்ஸ் மழலையர் பள்ளி தனது 2வது ஆண்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா கோவை அவினாசி சாலையில் உள்ள சிட்ரா அரங்கில் நடைபெற்றது..
மாணவர்களின் திறமைகள், சாதனைகள் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக நடைபெற்ற இதில், ஃபர்ஸ்ட் க்ரை கல்வி நிறுவனத்தின் தாளாளார் டாக்டர் ஆ. கிறிஸ்டோபர் பால் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து நடைபெற்ற விழாவில்
பள்ளியின்தாளாளர் கிறிஸ்டோபர் மற்றும் முதல்வர் ஏஞ்சலின் கிறிஸ்டோபர் ஆகியோர் இணைந்து சிறப்பு விருந்தினர்களுக்கு மலர் கொத்து வழங்கி வரவேற்றனர்..
நிகழ்ச்சியில் , கொங்குநாடு மருத்துவமனையின் முதன்மை குழந்தை நல மருத்துவர் டாக்டர் தினேஷ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், சிங்கப்பூரைச் சேர்ந்த லிசூன் என்ஜினியரிங் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் தர மேம்பாட்டு நிர்வாக பொறியாளர்,மற்றும் இண்டெலிடாட்ஸ் மழலையர் பள்ளியின் ஆலோசனை மேம்பாட்டு குழு உறுப்பினர் அசோக் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளின் ஆரம்ப கால கல்வியில் பன்முக திறன்களின் அவசியம் குறித்தும் அதில் பைற்றோர்களின் பங்கு குறித்தும் பேசி உற்சாகப்படுத்தினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, 2025–26 ஆண்டிற்கான ஆண்டு இதழ் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ‘ஆண்டின் சிறந்த மாணவர்’ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். கலாச்சார நிகழ்ச்சிகளில் மழலையர் பள்ளி குழந்தைகளின் நடனம், பாடல் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
மேலும், “மேஜிக் மகா” வழங்கிய மாயாஜால நிகழ்ச்சி சிறுவர் மனங்களை கவர்ந்தது.
நிகழ்ச்சி நிறைவில், பள்ளி சார்பாக , விழாவை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து விருந்தினர்கள், பெற்றோர், ஆசிரியர்கள்,ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர் ஏஞ்சலின் கிறிஸ்டோபர் நன்றி கூறி விழா இனிதே நிறைவு பெற்றது..
0Shares