முக்கியதினங்களில்இறைச்சிகூடங்கள்மூடமு.பிரதாப்உத்தரவு

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் மற்றும் வடலூர் இராமலிங்கனார் நினைவு நாள் ஆகிய தினங்களில் அனைத்து இறைச்சி கூடங்கள் மூட வேண்டும் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்  உத்தரவு :
திருவள்ளூர் மார்ச் 26: தமிழ் நாட்டில் மகாவீர் ஜெயந்தி, திருவள்ளுவர் தினம் மற்றும் வடலூர் இராமலிங்கனார் நினைவு நாள் ஆகிய தினங்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து இறைச்சி கூடங்களை மூடி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வருகின்ற 31.03.2025, செவ்வாய்கிழமை அன்று நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி தினம் கடைபிடிக்கப்பட உள்ளது.
எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து இறைச்சி கூடங்களான அடி தொட்டி, இறைச்சி வெட்டும் இடம் மற்றும் இறைச்சிகளை விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் மேற்படியான தினத்தில் கட்டாயம் மூடப்பட வேண்டும் .
மேலும் அரசு விதி முறைகளுக்கு எதிராக மகாவீர் ஜெயந்தி தினத்தன்று (31.03.2025) செயல்படும் அனைத்து இறைச்சி கூடம் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறைகளுக்கு (ஆணையர், ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி ஆணையர்கள், அனைத்து செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு) உத்தரவிடப்பட்டுள்ளது என திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares